UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, இந்த ஆண்டு மே, 5ம் தேதி நடக்கிறது. வெளிநாடுகளில், 14 நகரங்களிலும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்வுக்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதாவது வரும், 16ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கு மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.