UPDATED : மார் 22, 2024 12:00 AM
ADDED : மார் 22, 2024 10:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் தேஜஸ் ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறைசார்பில், அறிவியல் திருவிழா பிப்., மாதம் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.இவ்விழாவில் மாணவர்களுக்கு திறனறிப்போட்டிகள், கண்காட்சி, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், ராக்கெட் பயிற்சிப்பட்டறை நடந்தன. இதில் அறிவியல் கண்காட்சி மற்றும் திறனறிப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் இரண்டு நாட்கள் களப்பயணம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா, சென்னை பிர்லா கோளரங்கம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். களப்பயணத்துக்கான ஏற்பாடுகளை, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் செய்துள்ளது.