UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியர் பணியில் சேர, நெட் அல்லது தமிழக அரசின் செட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழக அரசின் சார்பில், இந்த ஆண்டுக்கான செட் தேர்வை நடத்த, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூன் 3 முதல் 25 வரை தேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://www.msuniv.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பிழைகள் ஏற்பட்டால், மே 3, 4ல், ஆன்லைன் வழியில் திருத்திக் கொள்ளலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.