UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:32 AM

மதுரை:
மதுரையில் மனதை கட்டுப்படுத்துதல், ஒருமைப்படுத்துவது குறித்த மன மேலாண்மை எனும் தலைப்பில் மண்டல மாநாடு நடந்தது.
மைண்ட் மேனேஜ்மென்ட் பவுண்டேஷன், சீக் பவுண்டேஷன் ஆகியவை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் வாழ்க்கை பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் முத்து தலைமை வகித்தார். மைண்ட் மேனேஜ்மென்ட் பவுண்டேஷன் தலைமை செயல் அலுவலர் விமலா, மதுரை அப்போலோ மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் நீலகண்ணன், ரோட்டரி கிளப் கவர்னர் ராஜா கோவிந்தசாமி, மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன், ரோட்டரி கிளப் துணை கவர்னர் ஆண்டனி பிரேம்குமார், மதுரை மறைமாவட்ட பாஸ்டரேட் இயக்குனர் பால் பிரிட்டோ உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த அமைப்புகள் சார்பில் பள்ளி, கார்ப்பரேட் நிறுவனங்களில் மனஅழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுவித்துக் கொள்வது பற்றி பயிற்சி அளிக்கின்றனர்.
அதன்படி வாழ்க்கையில் பீல் குட், டூ குட் என்ற பொருளில் நல்லதை உணர்ந்து, நல்லதையே செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
இந்த அமைப்பின் துாதுவர்களாக இருந்து அன்பு, கனிவு, கருணை ஆகியவற்றை பரப்பும் வருமான வரித்துறை கமிஷனர் கிளமென்ட், பிரமுகர்கள் இளங்கோ பாக்கியராஜ், பால்ராஜ், பிரேம்ராஜ், ராஜகோபாலன், சுதாகர், டாக்டர் செல்வமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.