தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப்பள்ளி அருகே சுகாதார சீர்கேடு

அரசுப்பள்ளி அருகே சுகாதார சீர்கேடு

அரசுப்பள்ளி அருகே சுகாதார சீர்கேடு


UPDATED : ஏப் 18, 2024 12:00 AM

ADDED : ஏப் 18, 2024 09:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2024 12:00 AM ADDED : ஏப் 18, 2024 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:
வையப்பமலை அரசுப்பள்ளி அருகே சுகாதார சீர்கேட்டால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.

மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம், இறைச்சிக்கழிவுகளை கொட்டி குவித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மாணவ, மாணவியர் வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போது துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், மூச்சுத்திணறல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே, அங்கு கொட்டப்பட்டுள்ள கோழிக்கழிவுகளை அகற்றவும், தொடர்ந்து இங்கு கழிவுகளை கொட்டாத வகையிலும் அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us