UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 12:21 PM

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு பகுதிநேர பி.இ., / பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள்:
கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - திருச்சி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - பண்ருட்டி.
துறைகள்:
சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், லெதர் டெக்னலாஜி.
விண்ணப்பிக்கும் முறை:
https://admissions.annauniv.edu/ptbeapp2024/login.php எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
அதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டினர், வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள், அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் வாரிசுகள் உட்பட பல்வேறு பிரிவினருக்கும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பிரத்யேகமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்புகள்:
பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான்.,
கல்லூரிகள்:
கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ச்சர் அண்டு பிளானிங், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - திருச்சி.
விண்ணப்பிக்கும் முறை:
https://admissions.annauniv.edu/nribe2024/login.php எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவைதவிர, 'இண்டஸ்ட்ரியல் கன்சார்ட்டியம்' எனும் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 31
விபரங்களுக்கு:
https://cfa.annauniv.edu/cfa/