UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 08:37 AM

கோவை:
கோவையில் புலம் தமிழ் இலக்கிய பலகை சார்பில் இலக்கிய சந்திப்பு கூட்டம், மாரண்ணகவுடர் உயர் நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த புலவர் பூ.அ.ரவீந்திரன் பேசுகையில், இன்றைக்கு நவீன இலக்கிய படைப்புகள் அதிகம் வெளி வருகின்றன. இது போன்ற இலக்கிய அமைப்புகள் மூலம், அந்த படைப்புகளை அறிமுகம் செய்வது அவசியம்.
தமிழின் வளர்ச்சி என்பது கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு மற்றும் உலக இலக்கியங்களை உள்ளடக்கியது. படைப்புகளை விருப்பு வெறுப்பு இல்லாமல், அதன் தரத்தை ஆய்வு நோக்கில் மதிப்பீடு செய்ய வேண்டும். நல்ல படைப்புகளையும், புதிய எழுத்தாளர்களையும் வரவேற்க வேண்டும் என்றார்.
கவிஞர் தங்கமுருகேசன் எழுதிய, வெப்பம் பூக்கும் பெருநிலம் கவிதை நுால் அறிமுகம் செய்யப்பட்டது. பேராசிரியர் மணிவண்ணன் நுால் குறித்து கருத்துரை வழங்கினார். எழுத்தாளர் போ.வேலுசாமி, கவிஞர் சியாமளா, தங்கமுருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.