UPDATED : மே 22, 2024 12:00 AM
ADDED : மே 22, 2024 10:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன.
இம்முறை, 10ம் வகுப்பு பொது தேர்வில், தோல்வி சதவீதம் அதிகம்; தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சியை பெற்று வந்த, பல தனியார் பள்ளிகளில் கூட, மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அடுத்த மாதம் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ள நிலையில், முன்கூட்டியே பள்ளிகளை திறந்து மாணவர்களை தயார்படுத்த, பல தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி வரும், 27ம் தேதி முதலே, 10, 11 மற்றும், 12ம் வகுப்பு மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகளை துவக்க திட்டமிட்டுள்ளனர்.