UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:43 AM

திருப்பூர்:
மாநகராட்சி பள்ளி வகுப்பறை மற்றும் வடிகால் கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, செல்லம்மாள் காலனி துவக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதற்கு வசதியாகவும், மாணவர்கள் பாதுகாப்பு கருதியும், தற்போதுள்ள வகுப்பறைகளை தற்காலிமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளன.
முழு ஆண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வகுப்புகள் எவ்வித பாதிப்புமின்றி நடைபெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வகுப்பறைகள் இடமாற்றம் செய்வது குறித்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நமக்கு நாமே திட்டத்தில் 2 வது வார்டு ஸ்ரீநகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டப்படுகிறது. பெருமளவு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்பணியை கமிஷனர் ஆய்வு செய்தார். வடிகால் அளவு மற்றும் கட்டுமானத் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.