UPDATED : ஜூன் 01, 2024 12:00 AM
ADDED : ஜூன் 01, 2024 05:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
கல்வித்துறை வளர்ச்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு, செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி. அதாவது, 20,332 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி களில் இணைய வசதி; 519.73 கோடி ரூபாயில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்; 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களால், உயர் கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம் தான் இது. பயணத்தை தொடர்வோம்; தமிழகத்தை உயர்த்துவோம்.