UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:39 AM

கோவை:
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, ஏழு ஒன்றியங்களில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த கல்வியாண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு, டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நேற்று நடந்தது. 40 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து, மாவட்ட துவக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோனியம்மாள் கூறுகையில், 40 பேரில், 15 துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி இடமாறுதல் பெற்றனர். மற்றவர்கள் மாறுதல் பெறவில்லை. அதனால் 24 இடங்கள் காலியாக உள்ளன.
கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில், நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகளில் 21 தலைமை ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு 10 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கான கலந்தாய்வு நாளை (இன்று) நடக்கிறது என்றார்.