நீட் அல்லாத படிப்புகளுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
நீட் அல்லாத படிப்புகளுக்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:35 AM
புதுச்சேரி:
நீட் அல்லாத படிப்புகளுக்கு இறுதி தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை அமைப்பான சென்டாக் முதற்கட்டமாக நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற்று,வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
இதில் ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டன. 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய ஆட்சேபனைகளை தெரிவித்து இருந்தனர். அனைத்து ஆட்சேபனைகளும் பரிசீலனை செய்து, இறுதி தரவரிசை பட்டியல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த படிப்புகள்
கால்நடை படிப்பில் புதுச்சேரி அரசு ஒதுக்கீடு, சுய நிதி இடங்கள், பாரின் நேஷனல் பிரிவுக்கு இறுதி தரவரிசை வெளியாகி உள்ளது.
பிற மாநில மாணவர்கள், என்.ஆர்.ஐ., மெரிட் லிஸ்ட் வெளியாகவில்லை. பி.எஸ்சி.,தோட்டக்கலை, அக்ரி, பி.பார்ம், பி.பி.டி., பி.எஸ்சி., பாராமெடிக்கல் படிப்புகள், பி.டெக்., பி.ஏ., எல்.எல்.பி., ஐந்தாண்டு சட்ட படிப்பு, இதர சட்ட படிப்புகள், உயிரியல் சார்ந்த பாரா மெடிக்கல் டிப்ளமோ படிப்புகள், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான டி.ஏ.என்.எம்., மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகளுக்கான இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.