UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
கோவை சி.இ.ஓ., பாலமுரளிக்கு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் முதன்மை கல்வி அலுவலராக இருந்த கீதா, மே, 31ம் தேதி ஓய்வு பெற்றார். தற்காலிகமாக மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலத்துக்கு, முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர் மருத்துவ விடுப்பில் சென்றதால், கோவை சி.இ.ஓ., பாலமுரளி, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பில் தொடர்வார், என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.