UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 08:32 AM
கோவை:
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) கோவை கிளை சார்பில், பட்டயக் கணக்காளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
துவக்க நிகழ்வாக, கோவை கிளை உறுப்பினர்கள், குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் நடந்தது. தொடர்ந்து மாலை, துடியலுார் ஐ.சி.ஏ.ஐ., வளாகத்தில் நடந்த விழாவில், பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக உரையாற்றினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினர்களாக உள்ள மூத்த உறுப்பினர்களை, எஸ்.ஐ.ஆர்.சி., முன்னாள் தலைவர் அர்ஜூன் ராஜ் கவுரவித்தார்.
கோவை கிளை சார்பில், பட்டயக்கணக்காளர் மாணவர்களுக்காக தேசிய கருத்தரங்கு, வரும் 5, 6ம் தேதிகளில் குனியமுத்துார், கிருஷ்ணா கல்லுாரியில் நடக்கிறது. ஐ.சி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் ராமசாமி, கோவை கிளை தலைவர் விஷ்ணு ஆதித்தன், செயலாளர் சர்வஜித் கிருஷ்ணன், எஸ்.ஐ.சி.ஏ.எஸ்.ஏ., தலைவர் தங்கவேல், பொருளாளர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.