UPDATED : ஜூலை 26, 2024 12:00 AM
ADDED : ஜூலை 26, 2024 09:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
உயிர் பிரியும் நேரத்திலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றிய தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன், நேற்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வரும் பொழுது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினை குழந்தைகளின் உயிரை கருத்தில் கொண்டு வாகனத்தை ஓரமாகி நிறுத்தி ஆபத்து நேராமல் காப்பற்றினார். உயிர் பிரியும் நேரத்திலும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றிய டிரைவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

