UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவை மாவட்ட அளவில் நமது பள்ளி; மிளிரும் பள்ளி என்ற விருதை பெற்றுள்ளது.
பள்ளியின் கற்றல் சூழல், மாணவர் ஒழுக்கம், இயற்கையான சூழல் உட்பட, ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, நமது பள்ளி மிளிரும் பள்ளி என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வழங்க, வாகராயம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி முதல்வர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.
இந்த அங்கீகாரத்துக்கு காரணமான தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பாராட்டு தெரிவித்தார். மோப்பிரிபாளையம் பஞ்சாயத்து தலைவர் சசிகுமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரத்னம் உள்ளிட்டோர், வாழ்த்து தெரிவித்தனர்.