UPDATED : ஆக 09, 2024 12:00 AM
ADDED : ஆக 09, 2024 10:57 AM

நீரழிவு துறையில் 'போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப்'பிற்கான சேர்க்கை அறிவிப்பை, தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
படிப்பு:
போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் இன் டயபெட்டாலஜி - ஓர் ஆண்டு
தகுதிகள்:
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் அவசியம். தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளாதவர்கள் 'நேட்டிவிட்டி' சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான பல்கலைக்கழகத்தில் எம்.டி., படிப்பை நிறைவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.2,500. எஸ்.சி., / எஸ்.சி.ஏ., / எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 16, 2024
விபரங்களுக்கு:
https://tnmedicalselection.net/