UPDATED : அக் 13, 2024 12:00 AM
ADDED : அக் 13, 2024 05:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி-ன் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு நாளை தொடங்குகிறது.
அக்.,14, 15, 16, 17, 18, 21, 22, 23, 26 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. அக்15 முதல் 23 வரை கணினி வழித்தேர்வும், 26ம் தேதி எழுத்துத் தேர்வும் நடக்கிறது. 652 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை மொத்தம் 95,927 தேர்வர்கள் எழுதின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 38 மாவட்ட மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.