UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 09:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.
இணை செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தார். சங்க வரலாறு ஆல்பத்தை அகில இந்திய ஓய்வு பெற்ற பேராசிரியர் சங்க தலைவர் பார்த்தசாரதி வெளியிட்டார்.
பேராசிரியர்கள் முனியசாமி, சண்முகசுந்தரம், ஜெகநாதன், விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வூதியதாரர்களுக்கு15 ஆண்டுகளாக பிடிக்கப்படும் தொகுப்புத் தொகையை பத்து ஆண்டுகளுக்கே பிடிக்க வேண்டும்.
7 வது ஊதியக்குழுவில் வழங்கப்பட்ட ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை ஓய்வூதியர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேராசிரியர் குணவதி நன்றி கூறினார்.