UPDATED : நவ 27, 2024 12:00 AM
ADDED : நவ 27, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் நடந்த மாவட்ட வாள் சண்டை போட்டியில் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர் வென்று சாதனை படைத்துள்ளனர்.
பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரியில் நடந்த இப்போட்டியில் மாணவிகள் 15 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் 9 மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளிக் குழு தலைவர் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை, செயலாளர் கிருஷ்ணன், தலைமையாசிரியை இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியை உமா பாராட்டினர்.