UPDATED : ஜன 08, 2025 12:00 AM
ADDED : ஜன 08, 2025 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :
மதுரையில் ஆபர், எச்.சி.எல்., அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர் முன்னிலையில் நடந்தது. ஆபர் நிறுவன திருச்சி மண்டல பொறுப்பாளர் ஈஸ்வரன் வரவேற்றார்.
முகாமில் நேரம், நிர்வாக மேலாண்மை, மாணவர்களை நல்வழிப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குழந்தைகள் பார்லிமென்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களின் இலக்கை அடையும் சாத்தியக் கூறுகளை எளிதாக்குதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. எச்.சி.எல்., நிகழ்ச்சி பொறுப்பாளர் ராஜலட்சுமி, பயிற்சியாளர் ரவிச்சந்திரன், மை ஸ்கூல் திட்ட பொறுப்பாளர் ரீகன், குழந்தைகள் பார்லிமென்ட் திட்ட அலுவலர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

