UPDATED : நவ 13, 2025 09:12 AM
ADDED : நவ 13, 2025 09:15 AM

சென்னை:
யு.பி.எஸ்.சி., எனும், மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான அதிகாரிகளை, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் வழியே தேர்வு செய்கிறது. 'இந்த தேர்வு, முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என, 3 நிலைகளாக நடக்கிறது.
நடப்பாண்டுக்கான முதன்மைத் தேர்வு, கடந்த ஆக., 22 முதல் 31ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுதும், 2,736 தேர்வர்கள் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றனர். தமிழகத்தில் இருந்து, 155 பேர் தகுதி பெற்றுள்ளனர் .
'நான் முதல்வன்' திட்டம்
'நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசின், அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு மையத்தில் படித்த, 87 தேர்வர்கள், யு.பி.எஸ்.பி., முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்' என, தமிழக அரசின் பயிற்சி மையத்தின் முதல்வர், சங்கர சரவணன் தெரிவித்துள்ளார்.

