sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

/

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு


UPDATED : பிப் 23, 2026 11:55 AM

ADDED : பிப் 23, 2026 11:56 AM

Google News

UPDATED : பிப் 23, 2026 11:55 AM ADDED : பிப் 23, 2026 11:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:
ஜாகிர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி ஜாகிர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதைப்பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்து, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் எவ்வாறு எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், போதைப்பொருள் பொருட்கள் பயன்படுத்துவதால் உடல் நலம், மனநலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் தீமைகள், போதைப்பொருள் வைத்திருத்தல், பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை சட்டப்படி குற்றம் என்பதை விளக்கினார்.

மேலும், மாணவர்கள் நல்ல ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம். போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்களின் பங்கு மிக முக்கியம் என எடுத்துரைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us