UPDATED : மே 28, 2026 06:43 PM
ADDED : மே 28, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
சென்னை:
காரைக்குடி அழகப்பா பலகலையின், மகளிரியல் துறை மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலை பெண்கள் ஆய்வு மையம் இணைந்து, வரும் ஜூன் 11, 12ம் தேதிகளில், இந்த கருத்தரங்கை நடத்த உள்ளன.
'உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, பழங்குடியின பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில் நடக்க உள்ள கருத்தரங்கில், ஆதிவாசி, தோடர், இருளர், காணி, வேட நாயகன் உள்ளிட்ட பழங்குடியின சமூக பெண்கள் பங்கேற்று, கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு தலைப்பு களின் கீழ், கலந்துரையாட உள்ளனர்.
'விக்சித் பாரத் 2047' இலக்கை அடையும் வகையில், பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இந்த கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.
