தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரமான கல்வி வழங்கி வரும் எஸ்.எஸ்.எம்., கல்லுாரி

தரமான கல்வி வழங்கி வரும் எஸ்.எஸ்.எம்., கல்லுாரி

தரமான கல்வி வழங்கி வரும் எஸ்.எஸ்.எம்., கல்லுாரி


UPDATED : மே 28, 2026 06:44 PM

ADDED : மே 28, 2026 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 06:44 PM ADDED : மே 28, 2026 06:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தரமான உயர்கல்வி வழங்குவதுடன் மனிதநேயம், சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவர்களிடம் வளர்க்கும் உயரிய நோக்கத்துடன் சென்னிமலை கவுண்டர் அறக்கட்டளையால் தேசிய கண்ணோட்டத்துடன் திண்டுக்கல்லில் எஸ்.எஸ்.எம்., கலை, அறிவியல் கல்லுாரி 2022ல் துவங்கப்பட்டது.

மாணவர்களை சுயஒழுக்கம், நற்பண்புகளுடன் கூடிய பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குதல், சமூக, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை தனது முதன்மை நோக்கமாக கொண்டு கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

2022- 2023, 2023 - 2024ம் கல்வி ஆண்டுகளில் கல்வி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கல்வி நிறுவன புத்தாக்க மன்றம் முறையே ஒன்று, மூன்று நட்சத்திர அங்கீகாரத்தை வழங்கி கவுரவித்தது.

நடைமுறை அனுபவத்தை மேம்படுத்த தொழில்துறை சுற்றுப்பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

2025, 2026ல் பட்டம் பெற்ற மாணவர்களில் 95 சதவீத மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணிநியமன ஆணை பெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கல்வி ஆராய்ச்சி, தொழில்துறை ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் கலசலிங்கம் நிகர்நிலை பல்கலை, பிஷப் ஹூபர் கல்லுாரி, உன்னத் பாரத் அபியான் மண்டல மையம், மதுரை மாவட்ட சிறு, குறுநிலை தொழில்கள் சங்கம், கோவை ஐ.க்யூ. ஜெனரல் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

மேலும், லெட்ஸ் விரைட் பப்ளிகேஷன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளை உள்ளடக்கிய காலம், லைப் பியான்ட் என்ற இரு நுால்கள் வெளியிடப்பட்டன.

இரு ஆசிரியர்கள் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருவர் முனைவர் பட்டம், 16 ஆசிரியர்கள் பல்வேறு பல்கலைகளில் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசிடம் இருந்து ஆசிரியர்களால் ஐந்து காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன என்பது ஆராய்ச்சி புதுமைத்துறையில் கல்வி நிறுவனம் தொடர்ந்து முன்னேற்றம் பெற்று வருவதற்கான சான்றாக உள்ளது.

10 கிராமங்கள் கல்லுாரியால் தத்தெடுக்கப்பட்டு உள்ளன. ஐ.ஏ.ஏ., சி.எஸ்.ஐ., அமைப்புகளின் உறுப்பினராக உள்ளது. இத்தகைய கல்லுாரியின் தொடர் பணிகளால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக விளங்குகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us