தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வானொலி அறிவிப்பாளர் பயிற்சி 50 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்

வானொலி அறிவிப்பாளர் பயிற்சி 50 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்

வானொலி அறிவிப்பாளர் பயிற்சி 50 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்


UPDATED : மே 28, 2026 06:45 PM

ADDED : மே 28, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 06:45 PM ADDED : மே 28, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'ரேடியோ ஜாக்கி' எனப்படும் வானொலி அறிவிப்பாளர்களுக்கான, தொழில் முறை பயிற்சி வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 50 மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.

காஞ்சிபுரம் ஏனத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தமிழ் துறை மற்றும் கோவை அனலி கலை மற்றும் இலக்கிய பள்ளி சார்பில், 'ரேடியோ ஜாக்கி' என அழைக்கப்படும் வானொலி அறிவிப்பாளர்களுக்கான தொழில்முறைப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் சங்கரா கல்லுாரியில் நடந்தது.

இதில், பல்வேறு துறைகளைச் சார்ந்த 50 தகுதி வாய்ந்த மாணவ மாணவியர் இப்பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.

சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் 50 மாணவ மாணவியருக்கு 'ரேடியோ ஜாக்கி' சான்றிதழ் வழங்கினார்.

பயிற்சி முகாமை நடத்திய பயிற்றுநர் பேராசிரியர் அரிஹரசுதனுக்கு பாராட்டுச் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இதில், தமிழ் துறை பேராசிரியர்கள், ஸ்ருதி சமுதாய வானொலி நிலையத்தினர், கல்லுாரி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us