UPDATED : ஜூலை 10, 2026 04:33 PM
ADDED : ஜூலை 10, 2026 04:34 PM
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பத்தில் அங்கன்வாடி மையங்களை கலெக்டர் தலைமையில் ஆய்வு நடந்தது.
நெல்லிக்குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு, சிவசண்முகம் நகர் அங்கன்வாடி மையங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். எடை குறைவாக இருந்த குழந்தைகளை முறையாக கவனிக்க அறிவறுத்தினார்.
குழந்தைகளின் அறிவு திறன் மற்றும் விளையாட்டு ஆர்வங்களை கேட்டறிந்தார். முள்ளிகிராம்பட்டில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்,மின்விசிறிகளை உடனே சரி செய்ய உத்தரவிட்டார்.
மேலும், திருக்கண்டேஸ்வரத்தில் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுவதற்கு நிரந்தர தீர்வாக விரைவில் அரசின் இடத்தில் கட்டடம் கட்டப்படும்; சரவணபுரத்தில் சாலையோர குப்பை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்; என தெரிவித்தார்.
இந்த ஆய்வில், சேர்மன் ஜெயந்தி, துணைத்தலைவர் கிரிஜா, திட்ட அலுவலர் செல்வி, கமிஷ்னர் காஞ்சனா உடனிருந்தனர்.
