UPDATED : செப் 15, 2026 05:56 PM
ADDED : செப் 15, 2026 05:58 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பத்மஜா தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் வேலை விபரம், ஊதியம் குறித்த தகவலையும், விண்ணப்ப படிவங்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் https://kallakurichi.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய ஆவணங்கள், சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், கள்ளக்குறிச்சி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 25ம் தேதி மாலை 05:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
