தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கதை வடிவம் தரும் யோசிப்பாயா!

கதை வடிவம் தரும் யோசிப்பாயா!

கதை வடிவம் தரும் யோசிப்பாயா!


UPDATED : செப் 26, 2026 12:27 PM

ADDED : செப் 26, 2026 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 12:27 PM ADDED : செப் 26, 2026 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

'எனக்கு ஒரு கதை சொல்லுவியா' என ஒரு குழந்தையிடம் கேட்டு பாருங்கள்! பேசும் விலங்குகள், பறக்கும் வீடுகள், கடல் மனிதர்கள் என அவர்களின் கற்பனைகள் எல்லையின்றி விரிவடையும்.

இப்படி குழந்தைகளின் மனதில் தோன்றும் கற்பனைகள் மற்றும் வெளிப்படாத உணர்வுகளுக்கு, எழுத்து வடிவம் கொடுக்கும் படைப்புத் தளமாக உருவாகியுள்ளது, 'யோசிப்பாயா' புத்தகங்கள்.

இந்த புத்தகங்களில் 'யோசி' என்ற மேக வடிவ கற்பனை நண்பர், வயதுக்கேற்ற கதை விதைகளை 'யோசிங்காஸ்' என்ற பெயரில் வழங்குகிறார்.

அவற்றை அடிப்படையாக வைத்து, குழந்தைகள் தங்களது கற்பனைக்கு ஏற்ப கதையை உருவாக்கலாம். ஒரு புத்தகத்தில் ஒரு கதை இடம்பெறும். கதையைத் தொடர ஒவ்வொரு பக்கத்திற்கு இரண்டு தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

குழந்தை தேர்வு செய்யும் விருப்பத்துக்கேற்ப, குறிப்பிட்ட பக்கத்துக்குச் சென்று கதையைத் தொடரலாம். இதன் மூலம் ஒரே கதைக்கு ஏழு விதமான முடிவுகளை உருவாக்கும் அனுபவம் கிடைக்கிறது.

இரண்டரை வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாசிக்கும் புத்தகங்களும், பெரிய குழந்தைகள் தாங்களே எழுதும் வகையிலான புத்தகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

யோசிப்பாயா புத்தகங்களை உருவாக்கிய ஸ்ரீலட்சுமி , ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். படைப்பெழுத்து, கதைசொல்லல், உள்ளடக்க உருவாக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:

மொபைல்போன், இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளின் கற்பனை மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்கும் நோக்கில் இப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கதை எழுதுவதன் மூலம் குழந்தைகள் தங்களது மகிழ்ச்சி, பயம், ஆசை, கவலை நம்பிக்கை உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.

இதன் மூலம் தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வு, சிந்தனை, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் உள்ளிட்டவை வளர்வதுடன், குழந்தைகளின் எண்ணங்களை பெற்றோர் புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது.

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் இருக்கும் கதையை எழுத்தாகப் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'யோசிப்பாயா' செயல்படுகிறது. இப்புத்தகங்களை, 'யோசிப்பாயா' அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கம் வழியாகப் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கதை எழுதுவதன் மூலம் குழந்தைகள் தங்களது மகிழ்ச்சி, பயம், ஆசை, கவலை நம்பிக்கை உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us