UPDATED : அக் 31, 2026 02:15 PM
ADDED : அக் 31, 2026 02:15 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 2, 2ஏ குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 1ம் தேதி காலை கள்ளக்குறிச்சி வட்டம் - 23, திருக்கோவிலுார் வட்டம் - 5 என மொத்தம் 28 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. இதற்காக கருவூலம், தீயணைப்பு, காவல், மின்சாரம், தமிழ்நாடு போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் நேற்று நடந்தது.
மாவட்டத்தில் 8,232 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வெழுதுபவர்கள் உதவிக்காக பஸ் வசதி, தீத்தடுப்பு பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், மருத்துவ அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் திருக்கோவிலுார் சார் ஆட்சியர் கார்த்திக்ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட தேர்வாணைய அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், சுற்றுக்குழு அலுவலர்கள் பங்கேற்றனர்.
