UPDATED : நவ 21, 2026 04:31 AM
ADDED : நவ 21, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
சின்னமனூர்:
பெரியகுளம் தோட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் வசந்தசேனன், விஜி, ஆதித்யன், அதுல் பாபு, தேவதர்ஷன், தனூஷ் ரெட்டி, இளையராஜா, கண்பத் டான், கார்திக், லோகேஷ் கண்ணன், மோஹித் குமார்மீனா, ராகுல் குமார் மீனா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் சின்னமனூர் பகுதியில் தங்கி விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை வழங்கி வருகின்றனர்.
சீப்பாலக்கோட்டையில் இயற்கை விவசாயம் செய்து வரும் ஜெயச்சந்திரன் தோட்டத்தில் செய்வாழை குலைகளை தரம் பிரித்தல், பேக்கிங் செய்தல் மூலம் சந்தை மதிப்பை உயர்த்தலாம் என்றும், வாழைப் பழங்களை மதிப்பு கூட்டுப் பொருள்களாக மாற்றுவதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்கள்.
