தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இயற்கை வேளாண்மை மாணவிகளுக்கு பயிற்சி

இயற்கை வேளாண்மை மாணவிகளுக்கு பயிற்சி

இயற்கை வேளாண்மை மாணவிகளுக்கு பயிற்சி


UPDATED : நவ 25, 2026 05:31 PM

ADDED : நவ 25, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:31 PM ADDED : நவ 25, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் வேளாண் மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி தரப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.

அவர்களுக்கு, சாத்தமங்கலம் இயற்கை விவசாயி மாதவன் பண்ணையில் ஒருநாள் பயிற்சி நடந்தது. இயற்கை வேளாண் முறைகள், பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு குறித்து செயல்விளக்கப் பயிற்சி தரப்பட்டது.

அப்போது, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், வெள்ளைக்கவுனி, கருப்புக்கவுனி, துாயமல்லி, கருடன் சம்பா, மல்லிகை சம்பா, தங்க சம்பா, இலுப்பைப்பூ சம்பா உட்பட 20 பாரம்பரிய நெல் ரகங்களை பார்வையிட்டனர்.

மேலும், ரசாயன உரங்களை தவிர்த்து வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, மீன் அமினோ கரைசல் , பஞ்சகாவ்யா மற்றும் ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி மண் வளத்தையும் பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டது.

அதுபோல், பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல் மற்றும் பப்பாளி, கொய்யா, ஆமணக்கு, வேம்பு, ஆடுதொடா, எருக்கு, நொச்சி உள்ளிட்ட தாவரங்களின் இலைகள் அடங்கிய 10 தழைக்கசாயம் குறித்து மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us