UPDATED : ஜன 11, 2011 12:00 AM
ADDED : ஜன 11, 2011 12:40 PM
அ நிறம் | அளவு
கடந்த 2010 ம் ஆண்டுக்கான &'கேட்&' தேர்வு முடிவுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியாகிவிட்டது என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை 12-01-2011(புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
சென்ற 2010 ம் ஆண்டிற்கான கேட் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியாகிவிட்டது என்ற சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த 2004 ம் ஆண்டும் இதே பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் இந்த சர்ச்சையை சம்பந்தப்பட்ட நிர்வாக வட்டாரங்கள் மறுக்கின்றன. கேட் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை யாரோ தவறாக கையாண்டுள்ளார்கள். இது சம்பந்தமாக இனிமேல் விசாரணை நடத்தப்படாது. அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ம் தேதிதான் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
