UPDATED : ஜன 17, 2011 12:00 AM
ADDED : ஜன 17, 2011 11:22 AM
கடந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பிரெஸ் இன்பர்மேஷன் பியூரோவில்(பி.ஐ.பி) பணியாற்றிய, டெல்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்(ஐ.ஐ.எம்.சி) -ஐ சேர்ந்த 100 மாணவர்களுக்கு அரசால் உறுதியளிக்கப்பட்டபடி இன்னும் படித்தொகை(அலொவன்ஸ்) வழங்கப்படவில்லை.
இந்த மாணவர்களின் சேவையை பெற்ற பி.ஐ.பி., இவர்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதன்படி இம்மாணவர்கள் பிற சம்பள ஊழியர்களுக்கு சமமாக கருதப்படுவதுடன், அவர்களுக்கு தலா ரூ.6500௦௦ பணத்துடன், படிப்பின்போதான பயிற்சிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் பி.ஐ.பி. துறைக்காக 1.5 மாதங்கள் பணியாற்றினார்கள்.
அதேசமயம் தூர்தர்ஷனுக்காக பணியாற்றிய மாணவர்களுக்கு படித்தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பி.ஐ.பி. துறைதான் இழுத்தடிக்கிறது. இதனை எதிர்த்து சில மாணவர்கள் ஐ.ஐ.எம்.சி. வளாகத்திற்குள் போராட்டம் நடத்தவே, ஒரு வாரத்தில் பணம் தரப்படும் என்ற உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் ஒரு நாளைக்கு 11 முதல் 12 மணிநேரம் வரை பணியாற்றினார். ஆனால் இவ்வளவு நாட்களாகியும் இன்னும் அவர்களுக்கான குறைந்தபட்ச பிரதிபலன்கள்கூட கிடைக்கவில்லை.
