தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள்


UPDATED : பிப் 15, 2011 12:00 AM

ADDED : பிப் 15, 2011 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2011 12:00 AM ADDED : பிப் 15, 2011 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் தமிழகத்தின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ( ஐ.ஓ.பி.,) ஒரு மிக முக்கிய இடமுண்டு. நாடு தழுவிய கிளைகள், முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், கோர் வங்கிச் செயல்பாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று இந்த வங்கியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வங்கியில் ஆயிரம் புரொபேஷனரி அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.


வயது வரம்பு
ஐ.ஓ.பி., வங்கியில் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற தகவல்கள் பற்றி அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


கல்வித் தகுதி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பி.சி., பிரிவினர் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இத்துடன் கம்ப்யூட்டர் திறனும் கூடுதலாகத் தேவைப்படும். அதே போல் இந்திய வங்கிமற்றும் நிதி கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.பி.எப்.,) டிப்ளமோ இன் பேங்கிங் அண்டு பைனான்ஸ் முடித்திருந்தால் முன்னுரிமை உள்ளது.


தேர்ச்சி முறை
ஐ.ஓ.பி.,யில் புரொபேஷனரி அதிகாரிப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/ஐ ஏதாவது ஒரு ஐ.ஓ.பி., வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப்பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பி.ஓ., பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே விண்ணப்பிக்கும் முன் இணைய தளத்தில் முழு விபரங்களையும் முதலில் அறியவும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான பிரத்யேகமான ஒரு இமெயில் முகவரி இருப்பதனை முதலில் உறுதி செய்யவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


முக்கிய தேதிகள்
விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 01.03.2011
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 01.03.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 22.05.2011
இணைய தள முகவரி: "
www.iob.in/careers.aspx"

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us