UPDATED : பிப் 22, 2011 12:00 AM
ADDED : பிப் 22, 2011 12:22 PM
இந்திய கடல் படையின் முக்கியப் பிரிவான கடலோர காவல்படை ஒவ்வொரு ஆண்டும் அறிவித்திடும் உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி கமாண்டன்ட் பொதுப் பணி, உதவி கமாண்டன்ட் சி.பி.எல்., உதவி கமாண்டன்ட் பைலட்நேவிகேட்டர் என பல்வேறு துணைப் பிரிவுகளில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணிக்கு, 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம். பைலட்நேவிகேட்டர் பணிக்கு பி.எஸ்சி. கணிதம் படித்திருப்போர் விண்ணப்பிக்கலாம். சி.பி.எல். எனப்படும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்போர் சி.பி.எல். பிரிவுக்கும், பட்டப்படிப்பு ஒன்றை இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களோடு முடித்திருக்கும் பெண்கள், மகளிர் பிரிவு பணியிடங்களுக்கும், டெக்னிகல் பிராஞ்ச் பணியிடத்துக்கு இன்ஜினியரிங் தகுதியுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணிப் பிரிவைப் பொறுத்து உடல் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பணிப் பிரிவுகளுக்குமே பொதுவில் சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். மென்டல் எபிலிடி தேர்வு, பிக்சர் பெர்சப்ஷன் தேர்வு, குழு விவாதம், உளவியல் திறனறியும் தேர்வு, குழுத் திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை மூலமாக இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
மும்பை மற்றும் சென்னையில் நேரடியாக இந்தத் தேர்வு முறைகளில் கலந்துகொள்ள வேண்டும். முழு விபரங்களையும், தகவல்களையும் பார்த்துக்கொள்ள வேண்டிய இணையதள முகவரி www.indiancoastguard.nic.in. நேரடியாக செல்லும்போது விண்ணப்பத்தின் ௨ நகல்களை(ஒரு ஒரிஜினல்/ஒரு ஜெராக்ஸ்) எடுத்துசெல்ல வேண்டும். தகுதிகள், திறன்கள், பிறந்த தேதி, முகவரி போன்ற அனைத்து அம்சங்கள் தொடர்பான ஒரிஜினல் சான்றிதழ்களையும் எடுத்துசெல்ல வேண்டும்.
