தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய மொழிகளை கற்பதற்கான பயிற்சி

இந்திய மொழிகளை கற்பதற்கான பயிற்சி

இந்திய மொழிகளை கற்பதற்கான பயிற்சி


UPDATED : மார் 09, 2011 12:00 AM

ADDED : மார் 09, 2011 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2011 12:00 AM ADDED : மார் 09, 2011 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு


இந்திய மொழிகளுக்கான மத்திய கல்வி நிறுவனம்(சி...எல்), பல இந்திய மொழிகளை கற்பதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.


மத்திய மனிதவள அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனம் மலையாளம், கொங்கனி, ஒரியா, மணிப்பூரி மற்றும் டோக்ரி உள்ளிட்ட பலவித மொழிகளை கற்றுக்கொள்வதற்கான 10 மாத பயிற்சியை நடத்துகிறது.


ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் சிறுபான்மையின மொழி பேசுபவர்கள் ஆகியோருக்காக இப்பயிற்சியின் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் தற்போது பெறும் சம்பளமும், இதர பயிற்சிபெறும் நபர்களுக்கு மாதம் ரூ.5000 -ம் ஊதியமாக வழங்கப்படும்.


இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க 2011, மார்ச் மாதம்தான் கடைசி. இதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள சி...எல். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us