தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கம்

மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கம்

மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கம்


UPDATED : மார் 18, 2011 12:00 AM

ADDED : மார் 18, 2011 01:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2011 12:00 AM ADDED : மார் 18, 2011 01:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கல்வி நிறுவனங்களில் அதிகளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மேலும் கூறியுள்ள சிதம்பரம், "இந்தியா போதைப் பொருட்களுக்கான பெரிய சந்தையாக மாறிவிட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வேறுபல உள்நாட்டு பிரச்சினைகளைப் போன்று இதுவும் ஒரு மிகப்பெரிய பிரச்சினைதான். நடத்தப்பட்டுள்ள பல்வேறான ஆய்வுகளின்படி, பல மாணவர்களுக்கு போதைப் பொருட்களுடன் தொடர்பு இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது. போதை பொருள் கடத்தலும் கடந்த 5 வருடங்களில் பெரியளவில் அதிகரித்துள்ளது.


கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது விஷயத்தில் நமது கவனக்குறைவால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவில் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இரு நாடுகளுக்கு மத்தியில் இந்தியா அமைந்திருப்பதானது போதைப் பொருள் கடத்தலுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.


போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பில் பணியாளர் பற்றாக்குறை இருந்தது. எனவே தற்போது அந்த குறையை சரிசெய்யும் விதமாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் போதை தடுப்பு விஷயத்தில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us