தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கான கல்வி குறும்பட போட்டி

மாணவர்களுக்கான கல்வி குறும்பட போட்டி

மாணவர்களுக்கான கல்வி குறும்பட போட்டி


UPDATED : மார் 21, 2011 12:00 AM

ADDED : மார் 21, 2011 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2011 12:00 AM ADDED : மார் 21, 2011 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பின் சார்பில்  &'இந்தியாவில் கல்வி&' எனும் தலைப்பில் மாணவர்கள் பங்குபெரும் குறும்படப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எந்த கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவரும் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். வரும் மார்ச் 30-ம் தேதி முதல் போட்டிக்கான படங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள்.


குறும்படங்களுக்கான கால அளவு 8 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். டிவிடி தொழில்நுட்பத்தில் அமைந்திருப்பது அவசியம். ஒவ்வொரு குறும்படத்துடனும் அதன் கதைச் சுருக்கம், கலைஞர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றிய விவரங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்.


நடுவர்குழுவால் வெற்றிப் படங்கள் தேர்வு செய்யப்படும். இந்தப் படங்கள் பின்னர் இஸ்லாமிய மாணவர் அமைப்பின் குறும்பட விழாவில் திரையிடப்படும்.


மேலும் விவரங்களுக்கு: குறும்பட போட்டி, கலாச்சார பேரவை, இஸ்லாமிய மாணவர் அமைப்பு தமிழ்நாடு மண்டலம், 6/5 இருசப்பன் தெரு, சென்னை  என்ற முகவரியில் அணுகலாம். அல்லது CulturalForum@siotamilnadu.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us