தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைதூர கல்வியில் புதிய பாடங்கள்

தொலைதூர கல்வியில் புதிய பாடங்கள்

தொலைதூர கல்வியில் புதிய பாடங்கள்


UPDATED : ஏப் 22, 2011 12:00 AM

ADDED : ஏப் 22, 2011 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2011 12:00 AM ADDED : ஏப் 22, 2011 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திருநெல்வேலி: அண்ணாமலை பல்கலையின் தொலைதூர கல்வியில், இக்கல்வி ஆண்டில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



பாளை கல்வி மையத்தில் நேற்று(21-04-11) முதல் அனைத்து பாடங்களுக்குரிய விண்ணப்பங்கள் வினியோகம் ஆரம்பமானது. அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, பி.ஜி டிப்ளமோ உட்பட அனைத்து வகை பாடங்களும் கற்றுத் தரப்படுகிறது. பாளை சமாதானபுரம் தகவல் மையத்தில் 2011-12 ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்களின் வினியோகம் நேற்று ஆரம்பமானது.



முதல் விண்ணப்பத்தை காண்ட்ராக்டர் சேவியர் பெற்று கொண்டு விற்பனையை துவக்கி வைத்தார். இளநிலை உதவியாளர் கந்தசாமி வரவேற்றார். அண்ணாமலை பல்கலையில் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை செவ்வாய்கிழமை தவிர மற்ற வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தகவல் மையத்தில் பெற்று கொள்ளலாம்.



அண்ணாமலை பல்கலையில் இக்கல்வி ஆண்டில் எம்.ஏ. வளர்ச்சி மேலாண்மை, என்.ஜி.ஓ மேலாண்மை, எக்ஸ்டெர்னல் மேனேஜ்மென்ட் உட்பட பல்வேறு பாடங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாட திட்டங்கள், விதிமுறைகள் குறித்த அனைத்து விளக்கங்களையும் தகவல் மையத்தில் நேரிலோ அல்லது 0462 - 2575111 என்ற டெலிபோன் எண்ணிலோ தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்பு அதிகாரி மேகி பெனடிக்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தகவல் மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us