UPDATED : ஏப் 23, 2011 12:00 AM
ADDED : ஏப் 23, 2011 11:05 AM
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்கு ஒரு மாதம் அறிவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியை துவக்கி வைத்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் பேசியதாவது : மாணவர்களுக்கான அறிவியல் திட்டம், இந்தியாவை வளமானதாக்க நடக்கும் கால்கோள்விழா. நாம் வாழும் பூமி 4,500 டிகிரி செல்சியஸ் நெருப்பு கோளமாக முதலில் இருந்தது.
25 லட்சம் ஆண்டுகளாக குளிர்ந்து, உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக தன்னை மாற்றிக்கொண்டது. ஆனால், மனிதன் தனது புதிய கண்டுபிடிப்புகளால் பூமிப்பந்தை சீரழித்துக் கொண்டிருக்கிறான்.
மனிதனுடைய செயல்பாடுகள் பூமிக்கு வரமா; சோகமா? என்ற கேள்விக்கு பதிலில்லை. மனிதனின் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் மோசமான பின் விளைவுகளை தடுப்பது பற்றிய ஆய்வில், மாணவ விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
