தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை மருத்துவர்களுக்கு புதிய வாய்ப்பு

இளநிலை மருத்துவர்களுக்கு புதிய வாய்ப்பு

இளநிலை மருத்துவர்களுக்கு புதிய வாய்ப்பு


UPDATED : ஏப் 23, 2011 12:00 AM

ADDED : ஏப் 23, 2011 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2011 12:00 AM ADDED : ஏப் 23, 2011 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கிராமப் பகுதிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் இளநிலை பட்டம்(எம்.பி.பி.எஸ்) மட்டுமே பெற்ற மருத்துவர்களுக்காக, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த படிப்புகள், அத்தகைய மருத்துவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, பணிபுரியும்போதே அவர்கள் புதிய பட்டம் பெறவும் உதவுகிறது. இதன்மூலம் தாங்கள் எந்த சிறப்பு மேல்படிப்பையும் படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையும் நீங்குகிறது.


தொலைநிலை கல்வி முறையில், குடும்ப மருத்துவம் என்ற பெயரில் ஒரு டிப்ளமோ படிப்பை தொடங்க மருத்துவ பலகலை திட்டமிட்டுள்ளது. ஒரு இளநிலை மருத்துவர் மருத்துவமனை பணியில் இருக்கும்போதோ அல்லது தனிப்பட்ட முறையில் ஒரு நோயாளியை கையாளும்போது பயன்படுத்தும் வகையிலோ இந்த படிப்பின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த படிப்பின் மூலம், என்னதான் அனுபவம் இருந்தாலும், சிறப்பு மேல்படிப்பு படித்த மருத்துவர்களுக்கு இணையாக தாங்கள் மதிக்கப்படவில்லையே என்ற என்ற வருத்தத்தில் உள்ள இளநிலை மருத்துவர்களின் மனக்குறை நீங்கும் என்று பலகலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப மருத்துவத்தில், தான் தொடங்க உள்ள எம்.டி. படிப்பிற்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தை எம்.ஜி.ஆர். பல்கலை பெற்றுள்ளது.


மருத்துவ கல்லூரியில் இந்த படிப்பை கற்பிப்பதற்கான சிறந்த வழிமுறையை ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மருத்துவ துறைகளில் இருந்து நிபுணர்களை கூட்டி, அவர்களில் ஒருவர், குடும்ப மருத்துவ துறைக்கு தலைவராக நியமிக்கப்படுவார். இந்த புதிய படிப்பை தொடங்க, மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கான தேர்வை பல்கலைதான் நடத்தும்.


ரிஹேபிளிடேஷன் மருத்துவத்தில் டிப்ளமோ முடித்துள்ள சுமார் 30 இளநிலை மருத்துவர்கள், அடுத்த மே மாத மத்தியில், தங்களுக்கான எம்.டி. பட்டத்தை பெறுவதற்கான தேர்வை எழுத உள்ளனர். அவர்களில் சிலர், 25 வருடங்களுக்கு முன்பே டிப்ளமோ முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us