தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் ரயில் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

அறிவியல் ரயில் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

அறிவியல் ரயில் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்


UPDATED : மே 05, 2011 12:00 AM

ADDED : மே 05, 2011 01:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2011 12:00 AM ADDED : மே 05, 2011 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை வந்துள்ள அறிவியல் கண்காட்சி ரயில் மாணவர்களுக்கு வரப்பிரசாதம், என, கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே. கோயல் கூறினார்.


உலக வேதியியல் ஆண்டான 2011ஐ முன்னிட்டு, ரயில்வே சார்பில் அறிவியல் கண்காட்சி ரயில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் 2010 டிச., 4ல் துவங்கியது. 43வது நிறுத்தமாக நேற்று மதுரை வந்தது.


13 பெட்டிகளை கொண்ட கண்காட்சி ரயிலை, கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே. கோயில் துவக்கினார்.


அவர் பேசும்போது, "அறிவியல் கண்டுபிடிப்புக்களில் இந்தியாவின் சாதனைகள், பிரபஞ்சம், மூளையின் செயல்பாடு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்தும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதை அறிவியல் வல்லுனர்கள் சிறப்பாக செய்துள்ளனர். இக்கண்காட்சி ரயில் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். அனைவரும் இதை கண்டு தங்களின் அறிவியல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us