அரசுப் பணிக்கு திறந்தநிலை பல்கலை பட்டத்தை ஏற்கக் கூடாது
அரசுப் பணிக்கு திறந்தநிலை பல்கலை பட்டத்தை ஏற்கக் கூடாது
UPDATED : மே 05, 2011 12:00 AM
ADDED : மே 05, 2011 03:13 PM
பள்ளிப் படிப்பை முடிக்காமல், திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றவர்களை தமிழக அரசுத் துறையில் புதிய பணிக்கோ, பதவி உயர்வுக்கோ தேர்வு செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்று அரசுப் பணிகளில் சேர்வதும், பதவி உயர்வு பெறுவதும் நடந்து வந்தது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில், திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பெறும் பட்டங்கள் செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பதவி உயர்வுக்கோ, காலிப் பணியிடங்களுக்கோ பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது திறந்தநிலை பட்டதாரிகளை தேர்வு செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
