தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறைகளை சரிசெய்ய பல்கலைகளுக்கு 1 ஆண்டு மட்டுமே இறுதிக்கெடு: யு.ஜி.சி. எச்சரிக்கை

குறைகளை சரிசெய்ய பல்கலைகளுக்கு 1 ஆண்டு மட்டுமே இறுதிக்கெடு: யு.ஜி.சி. எச்சரிக்கை

குறைகளை சரிசெய்ய பல்கலைகளுக்கு 1 ஆண்டு மட்டுமே இறுதிக்கெடு: யு.ஜி.சி. எச்சரிக்கை


UPDATED : பிப் 18, 2015 12:00 AM

ADDED : பிப் 18, 2015 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2015 12:00 AM ADDED : பிப் 18, 2015 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தின் 4 நிகர்நிலைப் பல்கலைகள் உட்பட, நாட்டின் 7 நிகர்நிலைப் பல்கலைகள், ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை 1 ஆண்டிற்குள் சரிசெய்யவில்லை எனில், நிகர்நிலைப் பல்கலை என்ற அந்தஸ்தை இழக்க வேண்டியிருக்கும் என யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக யு.ஜி.சி. தரப்பில் கூறப்படுவதாவது: மேற்கண்ட நிகர்நிலைப் பல்கலைகள், தங்களின் குறைகளை பல ஆண்டுகளாக சரிசெய்து கொள்ளவில்லை. அக்கல்வி நிறுவனங்களிலுள்ள பெரியளவிலான குறைபாடுகள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், மத்திய மனிதவள அமைச்சகத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

பல்கலை ஆய்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு, இறுதியாக, குறிப்பிட்ட 7 நிகர்நிலைப் பல்கலைகளுக்கு, தங்களின் குறைகளை சரிசெய்துகொள்ள, அதிகபட்சம் 1 ஆண்டுகாலம் மட்டுமே அவகாசம் அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இது, இறுதி கெடுவாகும்.

அந்த காலக்கெடுவுக்குள், அந்தப் பல்கலைகள், தங்களது குறைகளை சரிசெய்து கொண்டு, அதற்கான அறிக்கையை சமர்ப்பித்துவிட வேண்டும். இல்லையெனில், அவைகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்ற அந்தஸ்தை இழக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us