தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 1 தேர்வுக்கு தடை கோரி வழக்கு

குரூப் - 1 தேர்வுக்கு தடை கோரி வழக்கு

குரூப் - 1 தேர்வுக்கு தடை கோரி வழக்கு


UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM

ADDED : ஜூலை 09, 2021 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM ADDED : ஜூலை 09, 2021 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் பிரோஜா பேகம், மகேந்திரன் உட்பட ஆறு பேர் தாக்கல் செய்த மனு:

நாங்கள் பள்ளி மற்றும் பட்டப் படிப்பை தமிழ் வழியில் முடித்துள்ளோம். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை, தமிழக அரசு 2010ல் கொண்டு வந்தது. சட்டத்தில் அரசு 2020ல் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, அரசு பணிக்கு எந்த கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படுகிறதோ அதை முழுமையாக, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
குரூப் - 1 பணிக்கான தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜன., 20ல் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு 2021 ஜன., 3ல் நடந்தது. தேர்வு முடிவு பிப்., 9ல் வெளியானது.
நடவடிக்கை எடுக்க தடை

தமிழ் வழியில் படித்தோருக்கான சலுகை பெற தகுதியில்லாத பலரது பெயர்கள், தேர்வானோர் பட்டியலில் உள்ளன. இவர்கள் அடுத்து பிரதான தேர்வில் பங்கேற்க உள்ளனர். குரூப் - 1 முதல்நிலை தேர்வு முடிவு அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
நிர்ணயித்த கல்வித் தகுதி முழுதையும் தமிழ் வழியில் படித்தவர்களின் பெயர்களுடன், மாற்றி அமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும். எங்களை பிரதான எழுத்துத் தேர்வில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். 
நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்து, ''டி.என்.பி.எஸ்.சி.,யிடம் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று, ஜூலை 12ல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us