தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் ஆய்வுக்கு குழு: ஐகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு

நீட் ஆய்வுக்கு குழு: ஐகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு

நீட் ஆய்வுக்கு குழு: ஐகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு


UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM

ADDED : ஜூலை 09, 2021 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM ADDED : ஜூலை 09, 2021 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான, &'நீட்&' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மாநில அரசால் உயர்மட்டக் குழு அமைக்க முடியாது&' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு, பொது மக்களிடம் கருத்து கோரியுள்ளது. குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. சார்பு செயலர் மனுவுக்கு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து விட்டது. தற்போது, மத்திய சுகாதாரத் துறையின் சார்பு செயலர் சந்தன்குமார் தாக்கல் செய்த பதில் மனு:மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்காக, மருத்துவ கவுன்சில் சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. 2019ல் தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, 2020 செப்டம்பரில், மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மருத்துவ ஆலோசனை கவுன்சிலும் அமைக்கப்பட்டது.
நீட் தேர்வு தொடர்பான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், சமூக கொள்கைகளுக்கு எதிரானதாக இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள உரிமைகளை மீறுவதாகவும் இல்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதிகார வரம்புநீட் தேர்வுக்கு, உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதை அமல்படுத்துவதை கண்காணிக்க, மத்திய சட்டங்களில் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழக அரசு நியமித்துள்ள குழு செல்லாது. நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முரணாக, தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மத்திய பட்டியலில் வரும் விஷயத்தை ஆய்வு செய்ய, குழுவுக்கு அதிகார வரம்பு இல்லை. தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தின் கீழான, நீட் தேர்வுக்கான சட்டப் பிரிவுகள் மற்றும் பல் மருத்துவ சட்டத்தின் கீழான விதிமுறைகள், மத்திய பட்டியலில் வருகின்றன.
மருத்துவ கல்வியும், மத்திய சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முரணான நிலைப்பாடு சட்டப்படி நிற்காது. மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே, விசாரணை கமிஷன் அமைத்துக் கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, மாநில அரசு குழு அமைக்க முடியாது.மருத்துவ கல்வி தொடர்பான கேள்விகளை ஆராய கமிஷன் அமைப்பதற்கு, தேசிய கமிஷனுக்கு தான் தகுதி உள்ளது.
நீட் தேர்வு செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அது, சமூக பொருளாதார கொள்கைக்கு எதிரானது அல்ல. ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ள பிரச்னையை, இந்தக் குழு ஆய்வு செய்கிறது. இந்த நடவடிக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us