பாலிடெக்னிக்குகளில் ஷிப்ட்: செப். 1ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
பாலிடெக்னிக்குகளில் ஷிப்ட்: செப். 1ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
UPDATED : ஆக 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் முதல் தேதியில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி இதனைத் தொடங்கி வைக்கிறார்.
விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை ஆகிய 6 இடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புதிதாகத் தொடங்கப்படும் புதிய என்ஜினியரிங் கல்லூரிகளையும் இதே விழாவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் என்ஜினியரிங் கல்லூரிகளில் அதிக மாணவிகள் சேர்ந்துள்ளது வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்த ஆண்டில் காலி இடங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். உயர்கல்வித்துறை செயலர் கணேசன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோரும் உடனிருந்தனர்.

