UPDATED : நவ 07, 2025 08:49 AM
ADDED : நவ 07, 2025 08:50 AM

சென்னை:
'ஜே.இ.இ., முதன்மை தேர்வு எழுத, பிளஸ் 1 பதிவு எண் அவசியம்' என, சி.பி.எஸ்.இ., இணை செயலர் மணீஷ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான இறுதி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு எழுத, பிளஸ் 1 வகுப்பின் பதிவெண்ணை பதிவு செய்யும்படி, தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்காக, பெற்றோர் மற்றும் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அணுகுகின்றனர். ஆனால், இதை பள்ளி நிர்வாகம் தான் வழங்க வேண்டும். அதனால், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 பதிவெண்ணை வழங்கி, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

