தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காக்னிசன்ட் நிறுவனத்தில் தற்போது 1 லட்சம் ஊழியர்கள்!

காக்னிசன்ட் நிறுவனத்தில் தற்போது 1 லட்சம் ஊழியர்கள்!

காக்னிசன்ட் நிறுவனத்தில் தற்போது 1 லட்சம் ஊழியர்கள்!


UPDATED : டிச 03, 2010 12:00 AM

ADDED : டிச 03, 2010 02:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2010 12:00 AM ADDED : டிச 03, 2010 02:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதன்மூலம் அந்நிறுவனம் அதே துறைகளில் ஈடுபட்டுவரும் மற்ற பெருநிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்களுக்கு அடுத்து நான்காவது இடத்தை பகிர்ந்துகொள்கிறது. இந்த 1 லட்சம் பணியாளர்களில் 75% இடத்தை இந்தியர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.


டி.சி.எஸ். நிறுவனம் உலகம் முழுவதும் மொத்தம் 1.74 லட்சம் ஊழியர்களையும், இன்போசிஸ் 1.22 லட்சம் ஊழியர்களையும், விப்ரோ 1.15 லட்சம் ஊழியர்களையும் பெற்றுள்ளன. இதுகுறித்து காக்னிசன்ட் சி.இ.ஓ. பிரான்சிஸ்கோ டிசோசா கூறுகையில், "1994 -இல் நாங்கள் வெறும் 175 பணியாளர்களையே கொண்டிருந்தோம். ஆனால் 16 வருடங்கள் கழித்து இந்த பெரிய இலக்கை எட்டியுள்ளோம்.


25,000 ஊழியர் என்ற மைல்கல்லை எட்ட 12 வருடங்கள் ஆனது. ஆனால் அடுத்த குறுகிய காலத்தில் இது சாத்தியப்பட்டுள்ளது" என்றார்.
வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட கண்டங்களில் பரவலான கிளைகளைக் கொண்டிருக்கும் காக்னிசன்ட், இந்த 1 லட்சம் பணியாளர்கள் என்ற நிகழ்வை கொண்டாடும் வண்ணம், உலகம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us